இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

0

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யும் போது மின்சாரக் கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் காற்று மாசடைதலைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர் உரையாற்றினார்.

தற்போது ஒரு முறை சார்ஜ் செய்த வாகனமொன்று பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய தூரம் 300-350 கிலோமீற்றர் ஆகும்.

பல்வேறு இடங்களில் சுமார் 400இற்கும் அதிகமான மின்னேற்றும் நிலையங்கள் உள்ளதெனவும், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.b

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here