இலங்கையில் வாடகை கார்கள் முச்சக்கரவண்டிகள் இயங்க தடை!

0

இலங்கையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வாடகை கார்கள் அல்லது வாடகை முச்சக்கரவண்டி சேவைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த காலகட்டத்தில் அனைத்து வகையான பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களை அவசர காலங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பயணிக்க பயன்படுத்தலாம் அல்லது மருந்துகளை வாங்க தங்கள் இல்லத்திற்கு மிக அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்ல பயன்படுத்தலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பயணத்தடையின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here