இலங்கையில் வாகன ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு

0

இலங்கையில் புத்தாண்டு நிறைவடையும் வரை வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, காவல்துறை பிணை வழங்கப்பட மாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு குறித்த வாகனமும் காவல்துறையினால் பொறுப்பேற்கப்படும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here