இலங்கையில் வாகனங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

0

இலங்கையில் தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்திற்கு பின் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என நம்புவாகவும் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியன வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குமுறை குறித்து கலந்தாலோசித்து வருகிறது.

ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் விலை ஓரளவு குறையும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here