இலங்கையில் வயோதிப தம்பதியினருக்கு நேர்ந்த கதி

0

இலங்கையில் தெற்கு களுத்துறை பழைய வீதியில் வசித்த வயோதிப தம்பதியினர் ஒரே நேரத்தில் ஒன்றாக உயிரிழந்துள்ளனர்.

இயற்கையான முறையில் மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

களுத்துறை மரண விசாரணை அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் நிர்வாக அதிகாரியாக ஜனசிங்க என்ற 73 வயதுடைய கணவரும் 74 வயதுடைய விப்புலாவத்தி ஜயசிங்க என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மகளின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் இந்த இரண்டு மரணங்களும் இயற்கையான முறையில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here