இலங்கையில் ரயில் சேவை இன்று முதல் ஸ்தம்பிதம்

0

அனைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் நேற்று (12) நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளமையினால், இன்று ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவிக்கின்றார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றமையினால், அவர்களை பாதுகாப்பதற்கு முறையான திட்டமொன்று இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு வலியுறுத்தியே, இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here