இலங்கையில் மோட்டார் சைக்கிள்களால் ஏற்பட்டுள்ள நிலை… பொலிஸார் எச்சரிக்கை

0

இலங்கையில் பல பகுதிகளில் நேற்றைய தினம் விபத்துக்கள் மூலம் 6 வரை பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மூவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஏனைய மூவர் வீதியில் பயணித்தவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த 13ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான 8 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

அதில் உயிரிழந்தவர்களில் 55 வீதமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகும்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது.

அத்துடன் உயிர் பறிக்கும் ஆபத்தான வாகனமாக மோட்டார் சைக்கிள் மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here