இலங்கையில் மொல்னுபிரவீர் மாத்திரையின் இறக்குமதி செய்ய நடவடிக்கை

0

இலங்கையில் மொல்னுபிரவீர் ( Molnupiravir) வைரஸ் எதிர்ப்பு மாத்திரையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மருந்து உற்பத்தி தொடர்பான தாய் நிறுவனம், Merck மற்றும் Ridgeback Biotherapeutics உட்பட பல நிறுவனங்கள் இலங்கைக்கு மாத்திரையை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்த உற்பத்தியாளர்களின் உள்ளூர் முகவர்கள் இது தொடர்பாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட் -19 தொழில்நுட்ப குழு இம்மாத்திரைக்கு அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here