இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றில் மரணம்

0

நாட்டில் மேலும் 39 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 39 மரணங்களும் மே மாதம் 17 ஆம் திகதி முதல், ஜூன் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் சம்பவித்துள்ளன.

19 பெண்களதும் 20 ஆண்களதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொரட்டுவை, மாத்தளை, பொரளை, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கம்பளை, கொத்மலை, வவுனியா, களனி, படல்கும்புர, தொம்பே, காத்தான்குடி-02, வெல்லம்பிட்டி, வத்தளை, ஹொரனை, பண்டாரகம, மஸ்கெலியா, ஹட்டன், வட்டவளை, நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ, குருநாகல், காத்தான்குடி, கம்பஹா, கெலிஓயா, பொகவந்தலாவ மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஒருவரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 03 பேரும் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 08 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 09 பேரும், 70 – 79 வயதுக்கு உட்பட்ட 13 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 05 பேரும், உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 34 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரணங்கள் அனைத்தும் கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சானமை, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், தீவிர இதயநோய் நிலை, தீவிர கொவிட் நியூமோனியா, நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் நுரையீரல் செயலிழந்தமை ஆகியவற்றால் சம்பவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here