இலங்கையில் மேலும் 27 கொவிட் மரணங்கள்

0

நாட்டில் கொவிட் தொற்றின் காரணமாக பதிவாகும் இளையோர் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி 20 வயதுடைய யுவதியொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த யுவதி ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , குருதியில் ஒட்சிசன் அளவு குறைவடைந்தமையால் இதயமும் நுரையீரலும் செயழிலந்தமையால் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் 10 – 30 வயதுக்கும் இடைப்பட்ட 16 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆகும்.

 1. குருத்தலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர், பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் தீவிர மூச்சிழுப்பு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
 2. படல்கும்புர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். பல உறுப்புக்கள் செயலிழந்தமையுடன், மோசமடைந்த கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
 3. கண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 4. அகலவத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 5. வென்னப்புவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 6. பொலன்னறுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், வெலிகந்தை விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை மற்றும ; கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
 7. வெலிப்பன்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 8. மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 9. அலுத்கம பிரதேசதத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 10. மக்கொன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 85 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, மூச்சிழுப்பு நோய், நாட்பட்ட நுரையீரல் நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 11. தர்க்கா நகர் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 12. மொரப்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 13. களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் தொற்று மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 14. கல்பாத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 24 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 15. பேருவளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் தீவிர குருதிக் குழாய்கள் மோசமடைந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 16. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 17. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 41 வயதுடைய பெண் ஒருவர், போது 2021 மே 25 ஆம் திகதியன்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 18. வத்தேகெதர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 19. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 20. பூஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 93 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே மாதம் 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 21. மில்லவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 26 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்றுடன் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 22. நேபொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத்தொற்றுடன் மோசமடைந்த நிலைமை மற்றும் நாட்பட்ட நரையீரல் நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 23. புலத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 91 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 24. கடவத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 26 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 25. வத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத ;திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 26. வெல்லம்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 49 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 27. கொழும்பு 15 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 26 ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here