இலங்கையில் மேலும் பல அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்களாக சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதற்கமைய,
கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும்,
ஊடகத்துறை அமைச்சராகவும், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராகவும் பந்துல குணவர்தனவும்,
நீர்வளங்கள் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,
அமைச்சர் ரமேஸ் பத்திரண, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு மேலதிகமாக, கைத்தொழில் அமைச்சராகவும்,
புத்த சாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக விதுர விக்ரமநாயக்கவும்,
சுற்றாடல் அமைச்சராக நஸீர் அஹமட்டும்,
நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் அனுருத்த ரணசிங்கவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.