இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகள்! பொலிஸார் எச்சரிக்கை

0

இலங்கையில் கடந்த 5 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 1834 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 13 ஆம் திகதி முதல் இன்று 18 ஆம் திகதி காலை 6 மணி வரை விசேட சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரதேச பிரிவுகளுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளுக்கும், அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளருக்கும் காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவாயில்களிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here