இலங்கையில் முட்டை விலையில் வீழ்ச்சி

0

இலங்கையில் முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய திகதியில் முட்டையொன்றின் விலை 68 ரூபாவாக காணப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here