இலங்கையில் முடிவுக்கு வந்த போராட்டங்கள்- காலிமுகத்திடலில் குவிக்கப்ட்ட விசேட அதிரடிப்படையினர்

0

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று பிற்பகல் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடவடிக்கையின் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவருகிறது.

போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி அறிவித்திருந்தனர்.

அத்துடன், போராட்டக்களத்திலிருந்து வெளியேறினாலும் கூட எமது போராட்டம் நீடிக்கும்.

நாங்கள் அரைவாசி வெற்றியை அடைந்தாலும் கூட இன்னும் வெற்றிகளை காண வேண்டியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், அப்பகுதியிலிருந்து செல்லப் போவதில்லை என தெரிவித்து சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியிலேயே தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here