இலங்கையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன சற்று முன்னர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் நான்காவது கொவிட் தடுப்பூசி மாத்திரையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.