இலங்கையில் மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள்! வெளியாகிய தகவல்

0

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சகம் நம்புவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் படி மற்றும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

எனவே, செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் முழு ஆதரவை தாம் கோருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here