இலங்கையில் மீண்டும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

0

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுகின்றது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகும் மாணவர்களின் ஊடாக சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன.

இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அதேபோன்று அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலைகளின் சேவையாளர்களும் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here