இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

0

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த நத்தார் பண்டிகையின் பின்னர் இந்நாட்டு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததன் ஊடாக அவ்வாறான காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதில்லை என உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

டிசம்பர் நத்தார் பண்டிகை மற்றும் பின்னர் இருந்த தொடர் விடுமுறைக்கு பின்னர் அதிகப்படியான கொவிட் தொற்றாளர்கள் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பதிவாகியிருந்தனர். 2020க்கு முன்னர் நாம் பண்டிகைகளை கொண்டாடும் விதத்தில் கொண்டாடினால் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here