இலங்கையில் மீண்டும் திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்!

0

இலங்கையில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதை துரிதப்படுத்தும் வகையில், இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் விரைவில் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர். சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காக ஒரு கூட்டுத் திட்டம் சுகாதாரத் துறையில் நடைமுறையில் உள்ளது.
பல்கலைக்கழகங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் 30 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுடன் தொடர்புக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்போது மூடப்பட்டிருந்தாலும், கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஒன்லைனில் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here