இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்!!

0

நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் எனப் பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

டெல்டா பிறழ்வானது வடக்கு, கிழக்கு, மேல், தென் மாகாணங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில், டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளமை புலப்படுகிறது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுமாயின், கடந்த மே மாதம் போன்று இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here