இலங்கையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் சாத்தியம்

0
Sri Lankans watch as health officers take a swab sample to test for Covid-19 in Colombo, Sri Lanka, Thursday, Oct. 22, 2020. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை மக்களின் கவனமற்ற செயற்பாடுகளினால் எதிர்வரும் நாட்களில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள தேவையின்றி வரையறைகளை விதிக்க நேரிடுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார்

அனைவரும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். இன்னும் அதற்கான காலம் வரவில்லை. அதனால், தமது வீடுகளிலேயே இருந்து விடுமுறையை கழிக்க வேண்டும். இருந்தபோதும் அநேகமானவர்கள் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

அதேபோன்று அநேகமானவர்கள் முகக்கவசமின்றி ஒவ்வொரு இடங்களில் சுற்றித்திரிவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறு செயற்பட்டால் எதிர்காலத்தில் நோயாளர்களின் எண்ணிக்கையில் நிச்சியமான அதிகரிப்பு ஏற்படும்.

நாட்டில் தற்போது வரையும் 500 – 600 வரையிலான நோயாளர்களை அடையாளங்காணப்படுகிறாா்கள். இதுதொடர்பில் நாம் கவனம் செலுத்துவதாக இல்லை. இவ்வாறான கவனமற்ற செயற்பாடுகளினால், நோயாளர்கள் அதிகரித்த்தால் பின்னா் மீண்டும் அவசியமின்றி வரையறைகளை அமுல்படுத்த நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here