இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க பெற்றோலிய கூட்டுதாபனம் முயற்சி

0

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் W.W.D.சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிக்க எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே, தாமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் விலையுடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் ஒரு லீற்றர் டீசலின் ஊடாக ரூபா.32.50 நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 5 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரமே, எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுதாபனத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here