இலங்கையில் மீண்டும் ஊரடங்கா..?

0

நாடு திறந்திருக்கும் சூழ்நிலையில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது அவதானிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீப காலங்களில் பல பண்டிகை நிகழ்வுகள் கொரோனா தொற்றுநோய் பரவலை அதிகரிக்கும் வகையில் இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here