தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.