இலங்கையில் மீண்டும் அமுலானது ஊரடங்கு சட்டம்

0

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன்காரணமாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரங்களை நோக்கி பிரவேசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here