இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்….

0

இலங்கையில் இன்று 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமண மண்டபத்தில் இடம்பெறும் வைபவங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகாமல் குறைந்நது 200 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ள முடியும்.

திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டும் பங்குபற்ற முடியும்.

நேற்றைய தினம் 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய கொவிட் தொற்றாளர்களில் மூன்று வெளிநாட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563, 989 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் 9,256 கொவிட் தொற்றாளர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று 18 கொரோனா மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,346 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here