இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று…. பொது மக்களே அவதானம்!

0

இலங்கையில் தற்போது நாளாந்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது.

கிறிஸ்மஸ் பண்டிகை காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 744 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 564,733 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறை உரியவகையில் பேணுமாறு சுகாதார துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here