இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்

0

அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன.

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிஸ்கட், சவர்க்காரம், சலவை தூள், உடனடி நூடில்ஸ், சோயா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன.

ஆகவே கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here