இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம்!

0

பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது. எனவே, பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது எனஇலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான கட்டத்தை நாம் கடந்துவிட்டோம் என எந்த அடிப்படையிலும் குறிப்பிடமுடியாது. ஏனெனில் சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, ஒரேடியாக வழமைக்கு திரும்பும் வகையில் பயணத்தடையை தளர்த்தக்கூடாது. அவ்வாறு செய்தால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிய அலை உருவாகக்கூடும். எனவே, உரிய மீளாய்வுகளின் பின்னரே பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here