இலங்கையில் மின்னல் தாக்கி 17 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

கொட்டகலை – டிரேட்டன் தோட்டத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் அந்த பகுதியில் மழையுடனான வானிலை நிலவியுள்ளது.

தொழிலாளர்களின் கொழுந்து நிறுவை செய்யும் தூணை மின்னல் தாக்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது மின்னல் தாக்கத்தினால் சிறியளவான காயம் மற்றும் அதிர்ச்சிக்குள்ளானதன் காரணமாக இவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்

எனினும், அவர்களுக்கு எவ்வித பாரதூரமான பாதிப்புகளும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here