இலங்கையில் மின்சார நெருக்கடி-வீதி மின் விளக்குகள் அணைக்கப்படுமா?

0

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக மின்சார பாவனையை குறைப்பதற்கான யோசனையொன்று அமைச்சரவைக்கு முன் வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த யோசனையை முன் வைக்கவுள்ளதாக மின் சக்தி அமைச்சர் கமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு அமைய, தெருக்களில் உள்ள மின் விளக்குகளை அணைத்து வைப்பது, அலுவலகங்களின் மின் உபகரண பாவனைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மின் வலு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் திட்ட மிடப்பட்ட முறைமை ஒன்றின் கீழ் பொருத்தப்படவில்லை.

அவற்றை அணைப்பதானால் ஒவ்வொன்றாக அணைக்க வேண்டும்.அதிவேக பாதைகள், பிரதான தெருக்களில் திட்டமிட்ட முறையில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியும். அவை தொடர்பில் யோசனை ஒன்றினை முன்வைக்க எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here