இலங்கையில் மாமியாரை கொலை செய்த மருமகன்

0
Woman hand holding bloody knife

இலங்கையில் மத்திய மாகாணத்தின் தெரிபெஹா ஹெலகம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 50 வயதுடைய மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டில் மனைவி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச உலர் உணவுப் பொதிகளைப் பெறுவதற்காக இருவரும் ஹெலகம கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

அதன் போது கணவரின் பெயரில் பதிவு இருந்ததால் அம் மூவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு வாதம் அதிகரித்த காரணத்தால் மாமியாரையும் மனைவியையம் கத்தியால் குதி விட்டு குறித்த நபர் தப்பி சென்றுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் தெரிபெஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ரிக்கிலிகஸ்கட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் 27 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here