இலங்கையில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த சர்வதேச பாடசாலை ஆசிரியர்!

0

கம்பாஹா பகுதியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையொன்றின் 49 வயது ஆசிரியர் 17 வயது பெண் மாணவியை துஷ்பிரியோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் தகவல் தொழில்நுட்பத்துக்கு பொறுப்பான ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மலிவான விலையில் புத்தகங்களைப் வாங்கி கொடுப்பதற்கு ஆசிரியர் தானாக முன்வந்து கொழும்புக்கு அழைத்துசென்றுள்ளார். இதனை தனது மாணவி தாய்க்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தலங்கமாவின் கிம்புலாவலா சந்தியில் ஒரு கார்பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தபோது அந்த பெண் மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. இது அருகிலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநரால் கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் மாணவி மருத்துவ பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், இதன் போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here