இலங்கையில் மாணவர்களை இலக்கு வைக்கும் பாலியல் கும்பல்….

0
School teacher with handcuffs on hand, concept of bondage during quarantine

இலங்கையில் இணையத்தளத்தில் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்தி, சூம் தொழிநுட்பம் வாயிலாக கல்விபொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் வர்த்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நேற்றைய தினம் நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இயங்கி வந்த பெண்களை பணத்திற்கு விற்பனை செய்யும் பாலியல் தொழில் விடுதி ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரு பெண்கள், மற்றும் பாலியல் சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நுகேகொடை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் குறித்த பாலியல் விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் மத்துகம பகுதிளை சேர்ந்த 45 மற்றும் 43 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக சூட்சமமான முறையில் இவ்வாறு மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here