இலங்கையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்கள் முழுமையாக ஆரம்பம்!

0

மாகாணங்களுக்கு இடையேயான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 6,000 பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை இன்று முதல் 152 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனு கம தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், தனியார் பஸ்கள் அனைத்தையும் இயங்கு வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வழமையான கால அட்டவணையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும் தனியார் துறையினர் பஸ் சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பயணிகளை இருக்கை அளவுக்கமைய மாத்திரம் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்து பஸ் உரிமையாளர் களையும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இருக்கை கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இன்று முதல் கைப்பற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here