இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தளர்வு?

0

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக விதிக்கப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தடை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்த பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டின் நிலைமைக்கமைய இதுவரையில் அந்த கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here