இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே பயணத் தடை தொடர்பில் வெளியாகிய தகவல்!

0

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை தளர்த்துவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை மறு அறிவித்தல் வரையில் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துகளை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், அது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையே பயணத் தடை ஜுன் 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here