இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்

0

அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை(12) முதல் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் புகையிரத சேவைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் புகையிரதப் போக்குவரத்துப் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 புகையிரத சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here