இலங்கையில் மற்றுமொரு தொடர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா? வௌியான முக்கிய தகவல்

0

இலங்கையின் இஸ்லாம் ஸ்டேட் பயங்கரவாதக் குழுவின் இரண்டாம் நிலை தலைவரான நௌபர் மௌலவியினால் இந்த வருடம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், முறையற்ற திட்டமிடலால் அது தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான தலைமைத்துவம் இல்லாமையே இத்திட்டங்களின் தோல்விக்குக் காரணம் என்பது தெளிவாகிறது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாசீம் இந்தத் தாக்குதல்களை விரைவுபடுத்த விரும்பியுள்ளார்.

இதனால், நௌபர் மௌலவிக்கும் சஹ்ரானுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதால், இம் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும், சுதந்திர தின கொண்டாட்டங்களை இலக்கு வைத்தும் இந்தத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஸஹ்ரானின் மனைவியிடம் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.

ஸஹ்ரான் தனது சகோதரரான சைனி மௌலவியிடம் இந்த இரண்டாவது தாக்குதலை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கண்டி எசல பெரஹர மீதும் தாக்குதல் நடத்த, தனது மற்றொரு சகோதரரான ரில்வானுடன் இணைந்து ஸஹ்ரான் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இரண்டாவது தொடர் தாக்குதல்கள் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், ஏப்ரல் 21 தாக்குதலைவிட இந்த தாக்குதலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here