இலங்கையில் மற்றுமொரு டெல்டா தொற்றாளர்

0

கஹதுடுவ, ஜயலியகம பகுதியில் டெல்டா வகை கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக தர்மராஜா தெரிவித்துள்ளார்.

47 வயதுடைய கொழும்பு, கொம்பனிதெருவில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொற்றாளர் தற்போது பொலன்னறுவ கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய தாய், மனைவி மற்றும் மகன் உட்பட 50 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜயலியகம வீதி பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here