இலங்கையில் மற்றுமொரு அபாய நோய்!யாழ்ப்பாணம் உட்பட 4 மாவட்டங்களில் அபாய நிலை

0

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்தே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள் ஐவரும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மூவர் கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய இடங்களிலும் வசிப்பதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட வைத்தியர் பிரசாத் ரணவீர கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு நாட்டில் 26 மலேரியா நோயாளர்கள் பதிவாகிய அதேவேளை, இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் ஐந்து நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமையானது சிறப்பானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

“மலேரியா நோயால் கண்டறியப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறை வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை அளிப்பதே நாட்டின் தேசிய கொள்கை” என்று அவர் கூறினார்.

இலங்கையில் கடைசியாக மலேரியா மரணம் 2007 இல் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மலேரியா எதிர்ப்பு பிரசாரம் நாட்டில் மீண்டும் இந்த நோய் வருவதைத் தடுக்கவும் அதன் விளைவாக ஏற்படும் இறப்புகளை தடுக்கவும் விரும்புவதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here