யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய இடங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வழமை போன்று அலுவலக தொடர்ந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.