இலங்கையில் மர்மமாக வீதியோரத்தில் இறந்து கிடந்த நபர்…!

0

கம்பளை, உனம்புவ பகுதியில் இருந்து பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் இருந்து குறித்த நபர் இறங்கும் காட்சி சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அவ்விடத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் ஏதேனும் நோயால் வீதியில் விழுந்து மரணித்தாரா அல்லது எவ்வாறு உயிரிழந்தார் என்பது இன்னும் தெரியவராத நிலையில், கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த நபரின் முகத்தில் சிறு காயங்கள் இருந்துள்ளன.

எனவே, சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் 3 பிள்ளைகளின் தந்தையெனவும், மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here