இலங்கையில் மரக்கறி – கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு!

0

இலங்கையில் சந்தையில் மரக்கறி மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது.

வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இதனை தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் கோழி இறைச்சி கிலோ ஒன்று 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

லீக்ஸ், கரட், போஞ்சி ஆகிய மலைநாட்டு மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

கரட் கிலோ ஒன்றின் சில்லறை விலை 400 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் போஞ்சி மற்றும் கறி மிளகாய் என்பன 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பாகற்காய் கிலோ ஒன்று 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்போது, மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

தங்களது நெல்லை கொள்வனவு செய்யுமாறு பொலன்னறுவை விவசாயிகள் கோரியுள்ளனர்.

தங்களது நெல்லை கொள்வனவு செய்யாததன் காரணமாக பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், விவசாயிகளிடம இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேவையான நிதி, அரச வங்கியில் இருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கடந்தவார இறுதியில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here