இலங்கையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு

0

கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நேற்று (30) மாலை 6 மணி அளவில் கஹடகஸ்திகிலிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

44 வயதுடைய பெண் ஒருவரும் 46 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தம்பதியினர் எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் காயமடைந்த பெண்ணுடன் வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் அவர்களை தாக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here