இலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…!

0

இலங்கை புத்தளம் பிரதேசத்தில் நேற்று 9 ஆம் திகதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

29 வயதான குறித்த பெண், அவரின் 35 வயதான கணவரினால் கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை கட்டையினால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

பெண்ணின் உடல் சாக்குப் பைகளால் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 10 ஆம் திகதி அதிகாலை காவல்துறையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரேத பரிசோதனை இன்று 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புத்தளம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here