இலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு!

0

மண்ணெண்ணெய்யின் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 253 ரூபாவால் விலை அதிகரிப்பு இடம்பெற்றது.

இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு மீனவர்கள் உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சமையல் எரிவாயுவின் விலை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது, எனவே, மண்ணெண்ணெய் அடுப்புதான் பயன்படுத்தி வந்தோம், தற்போது அதன் விலையும் உச்சம் தொட்டுள்ளது. மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என வியாபார தரப்பு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here