இலங்கையில் மட்டுப்படுத்தப்படும் புகையிரத சேவை !

0

புகையிரத போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் பயணிகள் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்படும்.

எதிர்வரும் 5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள பின்னணியில் புகையிரத சேவைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும்.எரிபொருள் பற்றாக்குறை நிலைமையைக்கமைய புகையிரத சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது சவால் மிக்கது.

பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 இலட்சம் லீற்றர் டீசல் தேவைப்படுகிறது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் புகையிரத சேவையை முன்னெடுத்து செல்லவேண்டுமாயின் எதிர்வரும் நாட்களில் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவைகளை தவிர்த்து ஏனைய புகையிரத சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

புகையிரத சேவைக்கு ஒதுக்கப்படும் எரிபொருளை சேமிக்காமலிருந்தால் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடையும் போது முழு புகையிரத சேவையும் முழுமையாக பாதிக்கப்படும்.எதிர்வரும் 5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here