இலங்கையில் போலி கடனட்டைகளுடன் சீன பிரஜை…. பொலிஸார் சுற்றிவளைப்பு

0

இலங்கையில் கல்கிஸ்ஸ – டெம்ப்லர்ஸ் வீதியில் போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளுடன் சீன பிரஜை ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றினால் தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது சந்தேக நபர்கள் சமர்ப்பித்த போலி கடனட்டையில் பணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த தொகையை பெறுவதற்கு முற்பட்டபோது அவற்றை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் போனதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதோடு கடந்த 2 நாட்களில் போலி கடனட்டைகளை பயன்படுத்தி ஈட்டிய 780,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து 30 போலி கடனட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சீனா பிரஜையினால் போலி கடனட்டைகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கண்டி, வரகாபொல மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here