இலங்கையில் போதைப்பொருள் விருந்துபசாரம்… பெண்கள் கைது…

0

இலங்கையில் இராஜகிரிய பகுதியில் போதைப்பொருள்களுடன் விருந்துபசார நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இன்று குறித்த ஏழு பேரை ராஜகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இராஜகிரிய பிரதேசத்தில் இவ்வாறு போதைப்பொருள் விருந்துபசாரமொன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here